தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. ‘ரசிகர்களுக்காக மட்டுமே படம்’ என்பதில் உறுதியாக இருக்கும் அவர் இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும்படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய ‘அரண்மனை’ தமிழில் பேய்ப் படங்களைக் குழந்தைகளும் ரசித்துப் பார்க்கும் வகையில் இருந்தது.
முதல் பாகம் தந்த பிரமாண்ட வெற்றியை அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களும் பெற்றுத் தந்தன. இப்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், எஸ்.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரியளவிலான நட்சத்திரங்கள் திரளாக நடித்துள்ளனர்.
முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர் சி.
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏசிஎஸ் அருண்குமார், அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 2024 பொங்கல் பண்டிகையன்று வெளியாகவள்ளதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
படக்குழு:-
எழுத்து இயக்கம் – சுந்தர் சி
வசனம் – வேங்கட் ராகவன்
இசை – ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் – பொன்ராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர் கே
ஸ்டில்ஸ் – வி.ராஜன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்