Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaகனடாவில் வாழும்  தமிழ்நாட்டுப் பெண்ணின் போராட்டங்களை மையப்படுத்திய 'ஆக்குவாய் காப்பாய்' ரிலீஸுக்கு தயார்! 

கனடாவில் வாழும்  தமிழ்நாட்டுப் பெண்ணின் போராட்டங்களை மையப்படுத்திய ‘ஆக்குவாய் காப்பாய்’ ரிலீஸுக்கு தயார்! 

Published on

‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற வித்தியாசமான பெயரில், கனடா நாட்டில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

லூனார் மோஷன் பிக்சர்ஸ், ஆர் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட அரங்காடல் என்கிற வெற்றி பெற்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இக்கதையை சகாப்தன் என்கிற நாடக ஆசிரியர் எழுதிய. இந்த மேடை நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழுநீள படமாக தயாரித்து உள்ளனர்.

சகாப்தன் எழுதிய கதையை திரை கதை அமைத்து இயக்கி இருப்பவர் மதிவாசன் இவர் கனடா படங்களில் நடித்து வரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது கதையின் கரு கனடாவில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள தனது கணவனை ஆறுவருட காலம் போற்றி பாதுகாத்து வருவதோடுதன் பல வாழ்க்கை போராட்டங்கள் நடுவே ஆறு வயது பெண் குழந்தையும் வளர்ந்து படிக்க வைத்து வருகிறார்.

இப்படி வாழ்க்கை போராட்டத்தால் சிரமப்படும் பெண்ணை உற்றார் உறவினர். சமுதாயம் பார்க்கும் தப்பான கண்ணோட்டம் இவற்றை எல்லாம் எப்படி கடந்து போனாள்? என்பதே அடுத்த கட்டம். பெண் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் கிருந்துஜா மற்றும் கனடா திரை உலகத்தை சார்ந்த ஜெயாப்பிரகாஷ் டேனிஷ் ராஜ், செந்தில்மகாலிங்கம், மதிவாசன்சீனிவாசகம், சுரபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க கனடாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் ஒளிப்பதிவை ஜீவன் ராமஜெயம் & தீபன் ராஜலிங்கம்ஆகியோர் கவனித்து உள்ளனர்.

படம் விரைவில் வெளியாகிறது.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!