Monday, February 10, 2025
spot_img
HomeCinemaஇந்தியாவுக்காக கபடி விளையாடியவரின் வரலாற்றுக் கதையை அடிப்படையாக கொண்ட 'அர்ஜுன் சக்ரவர்த்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

இந்தியாவுக்காக கபடி விளையாடியவரின் வரலாற்றுக் கதையை அடிப்படையாக கொண்ட ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘அர்ஜுன் சக்ரவர்த்தி – ஜர்னி ஆஃப் அன் சங் சாம்பியன்’ படத்தில் விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ், துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில் அர்ஜுன் சக்ரவர்த்தி ஸ்டேடியத்தின் நடுவில் கையில் பதக்கத்துடனும் முகத்தில் பெருமிதத்துடனும் இருப்பதைக் காணலாம். இந்திய கபடியில் அர்ஜுன் சக்ரவர்த்தியின் தாக்கம் 1980களில் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவின் தாக்கத்திற்கு இணையாக உள்ளது என்ற வாசகம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

விஜய ராமராஜு இந்த பாத்திரத்திற்காக தன்னுடைய உடலை சிறப்பாக கட்டமைத்துள்ளார்.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீனி குப்பலா, “இது ஒரு திரைப்படமாக  மட்டுமில்லாமல், சவால்களை தாண்டி நம் அனைவரையும் ஊக்குவிக்கும் மனிதர்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கான எடுத்துக்காட்டாக அமையும். கனவை நனவாக்க முழு மூச்சாக உழைத்தால் இலக்கை எட்டிவிடலாம் என்பதை இப்படம் வெளிப்படுத்தும்.

ஒரு குழுவாக இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள இப்படம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக அயராது பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கையை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், இந்த பயணத்தில் எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம். இது சொல்லப்பட வேண்டிய கதையாகும்” என்றார்.

இயக்குநர் விக்ராந்த் ருத்ரா பேசும்போது “‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்’ படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி.

அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

மன உறுதி, உழைப்பு மற்றும் ஒருவரின் கனவுகளின் அசைக்க முடியாத நாட்டம் ஆகியவற்றின் கதை இது. இந்த சினிமா பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து எங்களை ஆதரிக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

படக்குழு:- சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்ய, சுமித் படேல் கலை இயக்கத்தை கவனிக்க பிரதீப் நந்தன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...