Monday, March 24, 2025
spot_img
HomeGeneral'குமரிக்கண்டம் 2.0' கலெச்சனை ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலில் அறிமுகப்படுத்திய நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

‘குமரிக்கண்டம் 2.0’ கலெச்சனை ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலில் அறிமுகப்படுத்திய நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

Published on

தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றான, ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி ‘குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0’ என்ற நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கான நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நகர் ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக ஏற்பாடாகியிருந்தது. நடிகை ப்ரீத்தி முகுந்தன் கலந்துகொண்டு குமரிக்கண்டம் கலெக்ஷன் நகைகளை அறிமுகம் செய்தார்.

நகை அறிமுகம்குறித்து இயக்குநர் ஏ வி ஆர் சித்தாந்த் பேசியபோது, ”எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாகப் புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்துச்செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0 நகைகள், நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத் தொன்மையான பரம்பரை மாறாமல், புதியதோர் அழகில் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் பாரம்பரியம் போற்றும் வகையில் அற்புத கலைநுணுக்கங்களோடு, உங்கள் வீட்டு இளவரசிக்கான, திருமண வைபவத்திற்கு ஏற்ற ஆயிரக்கணக்கான நகைகள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள் இங்குக் கிடைக்கும்.

இந்தக் குமரிக்கண்டம் கலெக்ஷனின் சிறப்பு, இது முந்தைய கலெக்ஷனைவிட அதிக பரிசோதனைகளை எதிர்கொண்டு, அவற்றில் தோன்றிய பல புதுமைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை, உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறைமைகளில் ஒரு முக்கியமான பங்காக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் சிறப்பம்சமாக எங்களது அனைத்து ஷோரூம்களிலும் குமரிக்கண்டத்து உலகின் வழி எம்பெருமானின் வைபவத்துடன் கூடிய உற்சவ தரிசனம் நடைபெறுகிறது. அதனையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியபோது, ”ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலுடன் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன் குமரிக்கண்டம் கலெக்ஷன் 1.0′ நகைகளை நான் தான் அறிமுகம் செய்தேன். நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நகைகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அருமையான விஷயம் குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த அழகிய கலெக்ஷனை உங்கள் கண்களால் பார்க்க, உங்கள் இதயத்தில் உணர, ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரிக்கு வருகை தாருங்கள்” என்றார்.

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் குறித்து…

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி சேலத்தில் ஸ்வர்ணபுரி, கடைவீதி – 2 கிளைகள், சென்னை, புதுச்சேரி, தாரமங்கலம், மேட்டூர், ஈரோடு, ராசிபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, அரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்-ஜெயநகர், டிக்கென்சன் ரோடு மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய இடங்களில் பரிசுத்தமே எங்கள் பாரம்பரியம் என்ற கொள்கையோடு இயங்கி வருகின்றன.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...