குருசோமசுந்தரம் நடித்த ‘பெல்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த வெங்கட் புவன், ‘ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவனே துணை’ என்பதை மையக் கருத்தாக கொண்டு ‘லார்டு லபக்குதாஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் திவான் ஹீரோவாக அறிமுகமாக, ஹீரோயினாக ராஷ்மி நடித்துள்ளார். பிருத்வி இசையமைக்க, மணிராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘கே வி வாகை மூவிஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 5-ம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘ஒய் எஸ் ஒய் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.