Tuesday, January 20, 2026
spot_img
HomeCinemaஇந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அர்த்தம் நிறைந்த வசனம் பேசி நடிக்கும் ‘அரிசி.'

இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அர்த்தம் நிறைந்த வசனம் பேசி நடிக்கும் ‘அரிசி.’

Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்க, இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் ‘அரிசி.’

இந்த படத்தில் முத்தரசனின் மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றிய எஸ் ஏ விஜயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘முழுக்க விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் இது. அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டுமல்ல. மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதை இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த படத்தின் சிறப்பு.

விவசாயியாக நடித்திருக்கும் தோழர்
இரா. முத்தரசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகேயுள்ள சிறு சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் படத்தில் நடித்திருக்கின்றனர்” என்றார்.

படக்குழு:-
இணைத் தயாரிப்பு – மகேந்திர பிரசாத்
ஒளிப்பதிவு – ஜான்சன்
எடிட்டிங் – அசோக் சார்லஸ்
கலை – சேது ரமேஷ்

Latest articles

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

More like this

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...
error: Content is protected !!