Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaஜவான் பட மூலம் சண்டைப் பயிற்சியாளர் 'அனல்' அரசு பெறப்போகும் சர்வதேச அங்கீகாரம்!

ஜவான் பட மூலம் சண்டைப் பயிற்சியாளர் ‘அனல்’ அரசு பெறப்போகும் சர்வதேச அங்கீகாரம்!

Published on

தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர் ‘அனல்’அரசு ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார்.

அதேபோல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்-அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி,ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர்,தபாங்-2,தபாங்-3,சுல்தான்,ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான ‘ஜவான்’ போன்ற பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, தானும் ஒரு இயக்குனராக ‘பீனிக்ஸ்[வீழான்]’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

இவர் ஏற்கனவே பணியாற்றிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, ஆனந்த விகடன் விருது,விஜய் டிவியின் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது(SIIMA)விருது,V4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமி விருது,தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது,நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது போன்ற விருதுகளையும் சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் ‘பாலிவுட் பாட்ஷா’  என்றழைக்கப்படும் ‘ஷாருக்கான்’ நடிப்பில், ‘அட்லி’ இயக்கத்தில், ‘அனிருத்’ இசையில்,’அனல்’அரசு அவர்கள் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய  ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்கு பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான விருதுகளையும் வென்றிருக்கிறார்.சமீபத்தில் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2024-லும்,ஜீ சினி விருதுகள் 2024-லும் விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்பட சண்டை பயிற்சி துறைக்கு ‘ஆஸ்கர் விருது’ போன்ற ஒரு விருதான ‘டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது’களுக்கான(Taurus World Stunt Awards) பட்டியலில்
ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் ‘ஜவான்’ திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!