நடிகர் அப்புக்குட்டி ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்றவர். அவர் இப்போது பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அதில் ‘வாழ்க விவசாயி’, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ இரண்டு படங்களும் விரைவில் வெளிவரவுள்ளது.
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் பிரபலமான அப்புக்குட்டி ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
‘பால்டிப்போ’ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள ‘வாழ்க விவசாயி’ படத்தில், கதையின் நாயகனாக, விவசாயியாக வாழ்ந்துள்ள அப்புக்குட்டிக்கு மீண்டும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.
ராஜூ சந்திரா இயக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட்டி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளாராம்.
கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக சொல்லும் அப்புக்குட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.