HomeCinema99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்... அடுத்தடுத்த படங்கள்,...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

Published on

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம் கவனம் ஈர்க்கிறார்கள். அந்த வரிசையில் சில தினங்கள் முன் வெளியான ’99/66′ படத்தின் பின்னணி இசை ரசிகர்களுக்கு திகில் அனுபவத்தைக் கொடுத்து, இசையமைத்த அமர்கீத்துக்கு பாராட்டுக்களை பரிசாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அமர்கீத் யார் என்பது பற்றி, அவரது பின்னணி, அடுத்தடுத்த  படங்கள் பற்றிய தகவல்களை தொகுத்து தருகிறோம்…

📌அமர்கீத் பிரபல இசையமைப்பாளர் செளந்தர்யனின் மகன். முறையாக இசை கற்றுத் தேர்ந்தவர். இரண்டு வருடங்கள் முன் அனிமேஷன் படம் ஒன்றுக்கு பின்னணி இசையமைத்திருந்தார். மையல் என்ற படத்தின் பாடல்கள் இவரது இசையில் வரவேற்பை பெற்றது. தற்போது ரக்சிதா மகாலெஷ்மி நடித்து வெளியாகியுள்ள 99/66 படத்தின் பின்னணி இசைக்காக பாராட்டப்படுகிறார்.

📌பின்னணி இசைக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், பின்னணி இசையமைப்பதை மட்டுமே தொடர்வீர்களா என்றால், அப்படி என்னை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ள மாட்டேன் என்கிறார். அவர் கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என ஈடுபாட்டுடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் அந்த படங்களின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகவுள்ளது. அதன்பின் அமர்கீத் மீதான புகழ் வெளிச்சம் பெரியளவில் இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

📌தனியிசைப் பாடல்களுக்கு என்றே ஜென்ஸி தலைமுறையில் ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை கவரும் வகையில் வெவ்வேறு ஜானர்களில் அமர்கீத் இசையில் ஐந்து பாடல்கள் உருவாகிறது. அதில் இரண்டு பாடல்களை அமர்கீத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

📌சமீபத்தில் பேட்டிக்காக அவரை சந்தித்தவர்களில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், ‘சினிமா ஹீரோ போல் இருக்கிறீர்கள், திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?[‘ என்று கேட்டதற்கு, மெல்லிய புன்னகையுடன் ‘நான் சினிமா ஹீரோ போல இருக்கிறேனா இல்லையா என்று தெரியவில்லை; ஆனாலும் தாங்கள் அப்படி சொல்வதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இப்போதைக்கு இசையமைப்பாளராக என்னை திரையுலகில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்துகிறேன்’ என்று மெச்சூர்டாக பதிலளித்துள்ளார்.

📌அமர்கீத்துக்கு பழைய கிளாஸிக் ஹிட் பாடல்களை ரீ மிக்ஸ் செய்யும் ஆர்வமும் இருக்கிறது. வாய்ப்பு அமையும்போது அசத்தலாக அதை செய்வேன் என்பவர், தன் தந்தையின் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சம்பா நாத்து சாரக் காத்து’ பாடலை ரீ மிக்ஸ் செய்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அமர்கீத்திடம் ஆர்வம், திறமை, ஈடுபாடு என எல்லாமும் இருக்கிறது. தலைக்கனம், கர்வம் என எதுவுமே இல்லாமலிருக்கிறது. காலம் அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத வெற்றியை, பாப்புலாரிட்டியை கொடுக்கும் என்பது வரலாறு. அமர்கீத் வரலாறு படைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்!

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...