Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaவெற்றி நடிப்பில், முழுமையான ரொமான்ஸ் சப்ஜெக்டில் உருவாகும் ‘ஆலன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘மக்கள்...

வெற்றி நடிப்பில், முழுமையான ரொமான்ஸ் சப்ஜெக்டில் உருவாகும் ‘ஆலன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

Published on

தமிழில் காதல் படங்கள் வருவது குறைந்துவிட்ட சூழலில் ரொமான்ஸ் வாழ்வின் அழகை முழுமையாக எடுத்துச் சொல்லும் விதத்தில் மனதை மயக்கும் காட்சிகளுடன் உருவாகிவரும் படம் ‘ஆலன்.’

‘எட்டுத்தோட்டாக்கள்’ வெற்றி நாயகனாக நடிக்க, ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா நாயகியாக நடித்துள்ளார். கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.

வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா ஆர்.

படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

படக்குழு:-
தயாரிப்பு: 3S பிக்சர்ஸ் சிவா ஆர்
இயக்கம்: சிவா ஆர்
ஒளிப்பதிவு: விந்தன் ஸ்டாலின்
இசை: மனோஜ் கிருஷ்ணா
படத்தொகுப்பு: காசிவிஸ்வநாதன்
கலை இயக்குநர்: கே.உதயகுமார்
பாடல்கள்: கார்த்திக் நேத்தா
ஸ்டண்ட்: மெட்ரோ மகேஷ்
நடனம்: ராதிகா & தஷ்தா
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!