Monday, April 21, 2025
spot_img
HomeCinemaஇந்த படம் அனைவரும் சிரித்து ரசிக்கும்படியான, புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினர்! -‘ஆலம்பனா' பட பிரஸ் மீட்டில்...

இந்த படம் அனைவரும் சிரித்து ரசிக்கும்படியான, புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினர்! -‘ஆலம்பனா’ பட பிரஸ் மீட்டில் நடிகர் வைபவ் பேச்சு

Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்த்து ரசிக்கும்படியான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ‘ஆலம்பனா.’

வைபவ், பார்வதி, திண்டுக்கல் ஐ லியோனி, முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் நடிக்க, கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாரி கே விஜய் இயக்கியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த டிசம்பர் 9-ம் தேதி சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் கதாநாயகன் வைபவ், ‘‘எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இந்த படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக அமைந்துள்ளது. படத்தில் உண்மையிலேயே சிரித்து ரசிக்க காமெடி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் பாரி K விஜய், ‘‘இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, நல்ல கதை, நன்றாக எடுத்தால் ஓடும் என்றார். நான் நினைத்ததை விட, கேட்டதை விட அதிகம் செலவழித்தார். அதனால் படம் நன்றாக வந்துள்ளது. எழுதியதைவிட, எடுப்பது கஷ்டம். அப்படி சரியாக எடுப்பதற்காக மகிழ்ச்சியோடு உழைத்துள்ளோம்.

பூதம் என யோசித்த போதே முனீஷ் காந்த்தான் மனதில் இருந்தார். நன்றாக நடித்துள்ளார். ஹீரோ, ஹீரோயினுடன் ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், காளிவெங்கட் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் தாத்தா கேரக்டர் என்ற போதே திண்டுக்கல் ஐ லியோனி தான் ஞாபத்திற்கு வந்தார். அவரும் சிறப்பாக செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்சனை குழந்தைகளும் ரசிக்கும் படி தந்துள்ளார்” என்றார்.

திண்டுக்கல் ஐ லியோனி, ‘‘நான் இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அதைவிட ஆலம்பனாவில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம். படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார்கள். முனீஷ்காந்துக்கு ரசிகன் நான். அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடித்துள்ளார். எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது குழந்தைகளோடு பார்க்கக்கூடிய அருமையான படம்” என்றார்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!