Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் சமகால அரசியலை பரபரப்பாக விவரிக்கும் 'அடங்காதே' ஜூன் மாதம் வெளியாகிறது! 

ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் சமகால அரசியலை பரபரப்பாக விவரிக்கும் ‘அடங்காதே’ ஜூன் மாதம் வெளியாகிறது! 

Published on

ஜீ.வி. பிரகாஷ் குமார், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்க, சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள ‘அடங்காதே’ திரைப்படம் இன்றைய அரசியலை விறுவிறுப்பாக பேசுகிறது.

சுரபி நாயகியாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “இது சமகால அரசியல் குறித்து பரபரப்பாக விவரிக்கிற அரசியல் திரில்லர். இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜீ.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி.

திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி” என்றார்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!