Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaமலையாளத்தில் 60 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடும் 'அம் ஆ' தமிழில் ஏப்ரல் 18-ல் ரிலீஸாகிறது!

மலையாளத்தில் 60 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடும் ‘அம் ஆ’ தமிழில் ஏப்ரல் 18-ல் ரிலீஸாகிறது!

Published on

திலீப் போத்தன், தேவதர்ஷினி நடிப்பில் அன்பைப் பேசும் படைப்பாக மலையாளத்தில் உருவாகி வெளியான படம் ‘அம் ஆ.’

இந்த படம் விமர்சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 60 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  இப்படம் இப்போது தமிழில் வரவுள்ளது.

இந்த படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஒரு தாயின் பாசத்தை பேசும் இப்படத்தில், தமிழ் நடிகை தேவதர்ஷினி தாயாக, மிக அழுத்தமான பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். இதுவரையிலும் காமெடியில் கலக்கிய இவர், இப்படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்.

ஸ்டீபன் எனும் ரோட் காண்ட்ராக்டர், கவந்தா எனும் ஒரு மலை கிராமத்திற்கு செல்கையில், அங்குள்ள ஒரு தாயையும், மகளையும் அவர்களோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது. மனிதர்களின் அன்பை, அழகாகப் பேசும் ஒரு அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!