அலங்கு திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களின் வரிசையில் இணைகிறது. அந்தளவுக்கு அழுத்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள அலங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரது ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர் தளபதி விஜய்யை சந்தித்தனர்.
படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் கிளிம்ஸையும் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடிக்க, மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி டி.சபரிஷ் , மேக்னஸ் புரொடக்சன்ஸ் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கிறார்.
படத்தை, உலகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், வரும் டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுகிறார்.