HomeCinemaஇந்த படம் மார்வெல் திரைப்படங்களைப் போல் சாகச உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும்! -பா விஜய்...

இந்த படம் மார்வெல் திரைப்படங்களைப் போல் சாகச உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும்! -பா விஜய் இயக்கியுள்ள ‘அகத்தியா’ படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில் தயாரிப்பாளர் வேல்ஸ் ஃபிலிம்ஸ் ஐசரி கணேஷ் பெருமிதம்

Published on

பிரபல திரைப் பாடலாசிரியர் பா விஜய் இயக்கியுள்ள படம் ‘அகத்தியா.’

ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன சிஜி பங்களிப்புடன், இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், புதுமையான உலகமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் பா விஜய்.

இந்த படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் இசை என அந்த வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், அனீஷ் அர்ஜுன் தேவின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சாரப் பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கப்போகும் இந்த படம் வரும் 2025 ஜனவரி 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

படம் குறித்து பேசிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், “திகில் த்ரில்லர் ஜானர் நாடு முழுவதுமுள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, இந்த படம் மூலம் அந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரமாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். ‘அகத்தியா’ கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this