Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaசாய் தன்ஷிகா நடிப்பில் மர்மதேசம் நாகா இயக்கிய 'ஐந்தாம் வேதம்' வெப் சீரிஸ் ZEE5 தளத்தில்...

சாய் தன்ஷிகா நடிப்பில் மர்மதேசம் நாகா இயக்கிய ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை!

Published on

கல்ட் கிளாசிக் மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில், சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், மற்றும் பொன்வண்ணன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள வெப் சீரிஸ் ஐந்தாம் வேதம்.’

ஐந்தாம் வேதம் ஒரு மாய உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்குச் செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் – ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடையப் போராடுவது அவளுக்குத் தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளைச் சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம்.

ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.

ஒரு பெண் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக வாரணாசிக்குச் செல்லும் ஒரு பெண்ணின் பயணத்தில் இந்தக்கதை துவங்குகிறது, மர்மங்கள் சூழ்ந்த பழங்கால அடையாள சின்னமான ஐந்தாம் வேதத்தின் மாய சுழலுக்குள் அவள் சிக்குகிறாள். அவளைத் துரத்தும் பல மாயங்களிலிருந்து, அவள் தப்புக்கிறாளா ? ஐந்தாம் வேதத்தின் உண்மையான மர்மம் என்ன?, இக்கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், ஐந்தாம் வேதம் சீரிஸை பாருங்கள். புதுவித அனுபவம் நிச்சயம்.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!