Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaமருத்துவக் கழிவுகளின் ஆபத்துக்களை மையப்படுத்தி முற்றிலும் ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவான அலங்கு படத்தை வெளியிடும்...

மருத்துவக் கழிவுகளின் ஆபத்துக்களை மையப்படுத்தி முற்றிலும் ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவான அலங்கு படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி!

Published on

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் விதமாக, எஸ் பி சக்திவேல் இயக்கியுள்ள படம் ‘அலங்கு.’

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து அந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை மையப்படுத்தி முற்றிலும் ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது இந்த படம்.

குணாநிதி கதைநாயகனாக நடிக்க, மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நாய் ஒன்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது.

இந்த படத்தை இயக்கியிருப்பவர், இதற்குமுன் ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படங்களை இயக்கியவர். அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம்.

படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கியுள்ளோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.

முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி படம் இருக்கும் என்றார்.

படத்தை டி சபரிஷ், எஸ் ஏ சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிறுவனம் ஜீ வி பிரகாஷ் நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.

இந்த படத்தைப் பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

படக் குழு:
எழுத்து, இயக்கம்: எஸ் பி சக்திவேல்
ஒளிப்பதிவு: எஸ் பாண்டிகுமார்
இசை: அஜீஷ்
கலை இயக்குனர்: பி ஏஆனந்த்
படத்தொகுப்பு: ஷான் லோகேஷ்
சண்டை பயிற்சி: தினேஷ் காசி
விலங்கு பயிற்சி: செந்து மோகன்
ஆடை: டி பாண்டியன்
ஆடை வடிவமைப்பு: ஜோஸ்வா மாக்ஸ்வெல் ஜெ
பாடல்: மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கலரிஸ்ட்: ரங்கா
கிராபிக்ஸ்&வண்ணம்: பிக்சல் லைட் ஸ்டூடியோ, Dnote
தயாரிப்பு நிர்வாகி: எஸ் முருகன்
விளம்பர வடிவமைப்பு: தண்டோரா & தினேஷ் அசோக்
நிர்வாக தயாரிப்பு: டிசங்கர்பாலாஜி
மக்கள் தொடர்பு: ஆர் குமரேசன்

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!