இளைய தலைமுறையின் காதலின் உணர்வுகளை மையப்படுத்தி, பாலாஜி ஜெயராமன் இயக்கத்தில், பாலசாரங்கன் இசையமைத்து பாடியிருக்கும் ‘அம்முகுட்டி’ பாடல், மெலடிப்பாடல் வகையில் இணையத்தில் பலராலும் விரும்பும் பாடலாக வைரலாகி வருகிறது.
அறிமுக நடிகர் சரண், மல்தி சஹார், நடிப்பில் கார்த்திகதிரவன் ஒளிப்பதிவில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் மகிழ்வான உணர்வை தரும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மலைப்பகுதிகள் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.