பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட தேர்வாகியுள்ளது.
பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் இதுதான் முதன்முறை.
பெருமாள் முருகனின் ‘கோடித்துணிக்கு புதிய உருவத்தை தரும் விதமாக இந்த படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.