HomeCinemaமீடியா துறையிலிருந்து மீண்டும் ஒரு இயக்குநர்... அஜித்தின் 'விடாமுயற்சி'யில் நடித்தவரை இயக்குகிறார்!

மீடியா துறையிலிருந்து மீண்டும் ஒரு இயக்குநர்… அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் நடித்தவரை இயக்குகிறார்!

Published on

மீடியா துறையில் இருந்து கடந்த சில வருடங்களில் திறமை மிக்க பல இளம் இயக்குநர்கள் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களின் புதிய கதை சொல்லல் முறை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான ஜாபர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், ’இராவணக் கோட்டம்’ மற்றும் நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கணேஷ் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஆயிஷா (பிக்பாஸ் சீசன் 6 மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ் ‘உப்புப்புளி காரம்’ புகழ்) நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் எம். புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

திருமணத்திற்குப் பிறகு தனது முன்னாள் காதலியை ஒருவன் சந்திக்கும்போது, அந்த நாள் முழுவதும் அவர்களுக்கு ஒரு பயங்கரமான ரோலர் கோஸ்டர் ரைடாக மாறுகிறது. அதன் தொகுப்புதான் இந்த படத்தின் கதை. காமெடி திரில்லர் திரைப்படமான இதில் பல திருப்பங்கள் உண்டு.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்படத்திற்கு சி சத்யா இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஸ்ரீகாந்த் பணியாற்றுகிறார். வைசாக் மற்றும் மோகன்ராஜா பாடல் எழுதுகின்றனர். சதீஷ் குமார் சுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், ஆக்‌ஷன் சந்தோஷ் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றுகிறார். பாபு கலை இயக்குநராக பணிபுரிகிறார். படத்தை அஃப்ரிஞ்ச் தயாரிக்கிறார்.

Latest articles

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர்  சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய 'சினிமாவின் ஆன்மா'...

More like this