வரலட்சுமி சரத்குமார் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அரசி.’
வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேருக்கு நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக், ராட்சஷன் வினோத்சாகர், ஹாசினி, சுப்ரமணிய சிவா, கே.நட்ராஜ், சாப்ளின் பாலு, மோகித் ராஜ், மீரா, விஜய் டிவி ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
சூரியகிரண், ஏ.ஆர்.கே ராஜராஜா என இருவர் இயக்கியுள்ள இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள்.
‘ரசிமீடியா மேக்கர்ஸ்’, ‘வி.வி.பிலிம்ஸ்’ சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இந்த படத்தை சூரியகிரண், ஏ.ஆர்.கே ராஜராஜா இருவருமாக இயக்கி இருக்கிறார்கள்.
வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்போடு வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
படக்குழு:-
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
இசை: சித்தார்த் விபின்
பாடல்கள்: ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா
நடனம்: தினா
சண்டைப் பயிற்சி: மிரட்டல் செல்வா
மக்கள் தொடர்பு: வெங்கட்