Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaஎம்ஆர் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பில் உருவாகும் 'லவ் இங்க்.' அஜித் பட நடிகரின் நடிப்பில்

எம்ஆர் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பில் உருவாகும் ‘லவ் இங்க்.’ அஜித் பட நடிகரின் நடிப்பில்

Published on

ரோம் காம் சப்ஜெக்டில் தற்கால உறவுகளைச் சுற்றிவரும் கதையம்சத்தில் உருவாகிவரும் படம் ‘லவ் இங்க்.’ இந்த  படத்தின் மூலம் எம்ஆர் பிக்சர்ஸ் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார்.

இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் ‘லவ் இங்க்.’

இதனால், ஜோடிகளுக்கு இடையில் காதல் கூடுகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், இதன் இன்னொரு பக்கத்தை சொல்ல வேண்டும் என்றால் Upgraded version of possessiveness. இப்படியான காதலர்களைச் சுற்றிதான் ‘லவ் இங்க்’ படம் நகர்கிறது. இதோடு படத்தில் ஃபன், ஆக்‌ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட்டும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் அஜித்குமாரின் ’வலிமை’, அதர்வா முரளியின் ’100’ மற்றும் பல படங்களில் ராஜ் அய்யப்பா தனது இயல்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் மட்டுமல்லாது ஓடிடி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘உப்பு புளி காரம்’ ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. ‘லவ் இங்க்’ படத்தில் நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். டெல்னா இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்து மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார். இந்த ரோம்-காம் ஆக்‌ஷன் படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதற்கு முன்பு, சில படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து சில அரசியல் பாடல்களை இயக்குவதில் தனது திறமையை நிரூபித்தார்.

இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மகேந்திரன் ஆதிகேசவன் சாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த பிறகு மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான நடிப்பு மற்றும் அதே நேரத்தில், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் மக்களை ஈர்க்கும் வசீகரம் கொண்ட ஒரு நடிகரைத் தேடினேன். ’வலிமை’ படத்தில் ராஜ் அய்யப்பாவின் நடிப்பைப் பார்த்தபோது, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று உணர்ந்தேன். டெல்னா டேவிஸ் தனது திறமையான நடிப்பு மற்றும் அழகால் பல ரசிகர்களைப் பெற்றவர். யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே.பி.ஒய்.வினோத், மௌரிஷ் தாஸ், ப்ரீதா, வினோத் முன்னா ஆகியோர் நடிக்கின்றனர். டி.எஸ்.ஜி (’மார்க் ஆண்டனி’ வில்லன்) இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்” என்றார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு: அர்ஜூனா A.S

இசை: விஷ்ணு விஜய்

கலை இயக்கம்: ராமு தங்கராஜ்

எடிட்டிங்: பி.கிருஷ்ணா சுதர்சன்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...