Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaமாணவர்களை அங்கீகரித்து ஊக்கப்படுத்திய 'தளபதி' விஜய்... உற்சாகமாக நடந்த கல்வி விருது வழங்கும் விழா!

மாணவர்களை அங்கீகரித்து ஊக்கப்படுத்திய ‘தளபதி’ விஜய்… உற்சாகமாக நடந்த கல்வி விருது வழங்கும் விழா!

Published on

‘தளபதி’ விஜய்கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.

இந்த ஆண்டு தமிழக வெற்றி கழக கட்சித் தலைவராக மீண்டும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் மூலம் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்க முடிவு செய்தார்.

அதற்கான நிகழ்வு சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் இன்று (28-06-24) நடந்தது. நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த எஸ்.பிரதிக்ஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த இ.மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு ‘வைர தோடு’ வழங்கி கௌரவித்தார் ‘தளபதி’விஜய்.

அதேபோல 10-ஆம் வகுப்பிலும் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் ஏ.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த கே.காவ்யாஶ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த ஆர்.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த டி.காவ்யா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை பெற்று உத்வேகமடைந்தனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை(03-07-2024) அன்று மீதமுள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இதே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!