Sunday, January 19, 2025
spot_img
HomeCinemaஇந்த படம் ஆண்கள் மனதில் தங்கள் தாய்மீதும், மற்ற பெண்கள் மீதும் மரியாதையை உருவாக்கும்! -'பர்த்மார்க்'...

இந்த படம் ஆண்கள் மனதில் தங்கள் தாய்மீதும், மற்ற பெண்கள் மீதும் மரியாதையை உருவாக்கும்! -‘பர்த்மார்க்’ இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்

Published on

ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலஷ்மி ஆகியோர் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் படம் ‘பர்த் மார்க்.’

மிரினா ஏழு மாத கர்ப்பிணியாக, ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.

படம் பற்றி பேசிய இயக்குநர், ”இந்த படம் நிச்சயம் புது அனுபவம் கொடுக்கும். நம் வாழ்வில் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். சுகப்பிரசவம் பற்றிய விசயங்களை படிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தது. இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால் படமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் 1990 களில் நடக்கிறது.

கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவவீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் அந்த கிராமம்.

அங்கு தம்பதிகள் சந்திக்கும் மனப்போராட்டங்கள், மாற்றங்களைத் த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இந்த கிராமத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை அமைத்தோம்.

ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். ஷபீரும் கடுமையாக உழைக்கக்கூடியவர். வருகிற பிப்ரவரி 23 அன்று இந்தப் படம் வெளியாகிறது.

படம் பார்த்து முடித்ததும் தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இந்தக் கதை ஏற்படுத்தும்” என்றார்.

படக்குழு:
எழுத்து, தயாரிப்பு: ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்
இயக்குநர்: விக்ரம் ஸ்ரீதரன்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர்: உதய் தங்கவேல்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி கண்ணத்
கூடுதல் திரைக்கதை: அனுசுயா வாசுதேவன்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமாஸ்
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்
கலரிஸ்ட்/ டிஐ: பிரதீக் மகேஷ்
விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ
தயாரிப்பு நிர்வாகி: ரவிக்குமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ரீராம் சிவராமன்
லைன் புரொட்யூசர்: கார்த்தி வேல்
புரொஸ்தெடிக்ஸ்: வினீஷ் விஜயன்
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத்...

வசூல்ராஜாவான மதகஜராஜா’வை ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! -இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர் அறிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி...

15 வருடங்களாக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது சிவன் அருளால் இந்த படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஷ்ணு மஞ்சு...

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா' திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு...

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி...

More like this