யுவன் பிரபாகர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகிகளாக சமந்து, ஜெயலட்சுமி ஆகியோர் நடித்துள்ள படம் ‘கொலைதூரம்.’
‘ஹாசினி மூவி’ தயாரிக்கும் இந்த படத்தில் பெஞ்சமின், அம்பானி சங்கர், கராத்தே ராஜா, ரஞ்சன், டில்லிராணி, மீனா, சாரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றார்கள்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பிரபு.
வெளிநாடு சென்று கடுமையாக உழைத்து ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகிறான் நாயகன். ஆஸ்தி அந்தஸ்து சொத்து எல்லாமே கிடைத்துவிட்டது. வெளிநாட்டிலிருந்து கொண்டே தன் சகோதரிகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறான். பிறகு தாய்நாட்டுக்கு வருகிறான், பிறந்த மண்ணில் இரு சகோதரிகளும் சேர்ந்து சகோதரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த நிலையில் அவன் மீது கொலைப்பழி விழுகிறது. கொலைப்பழி சுமத்தியது யார்? என்ன காரணம்? அதிலிருந்து நாயகன் மீண்டாரா? என்பதை சுற்றிச்சுழல்கிறது இந்த படத்தின் கதை.
திருவண்ணாமலை, செஞ்சி, பாண்டிச்சேரி, ஏற்காடு, ஏலகிரி, சென்னை ஆகிய இடங்களில் ஒரேகட்டமாக 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது.
படத்தில் நான்கு பாடல்களும் இரண்டு சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
‘குண்டுமல்லி பொண்ணு குத்த வச்ச கண்ணு…’ என்ற குத்துப் பாடலும், முதல் முறை பார்த்தேன் காதல் உயிர் வரை சேர்த்தேன்…’ என்ற டூயட் பாடலும் படத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.
சென்சாரில் யூ / ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
படக்குழு:
தயாரிப்பு: ‘ஹாசினி மூவி’ ஹாசினி பிரபாகர்
ஒளிப்பதிவு: செந்தில் மாறன்
இசை: இந்திரஜித்
பாடல்கள்: காதல் மதி, தேன்மொழியன்
எடிட்டிங்: நவீன்
சண்டைப் பயிற்சி: மருது பாண்டி
நடனம்: ராம் முருகேஷ்
சவுண்டு டிசைனர்: சண்முகம் நிஷோக்
மக்கள் தொடர்பு: வெங்கட்