அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கிவரும் முகாசி’ படத்தில், பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவர் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘முசாசி’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.