Tuesday, July 8, 2025
spot_img
HomeCinemaபிரித்திவிராஜ் சுகுமாரன் நடிக்கும் 'தி கோட் லைஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரெபெல் ஸ்டார்...

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரெபெல் ஸ்டார் பிரபாஸ்!

Published on

தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் என்கிறது படக்குழு. இதுபோன்ற சர்வைவல் அட்வென்சர் கதைகள் இந்திய சினிமாவில் அரிதாகவே வருகிறது. அதுவும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தப் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை பிரித்விராஜூடன் ‘சலார்’ படத்தில் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரெபல் ஸ்டார் பிரபால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வலி, தீவிரம், நம்பிக்கை, தீர்மானம் என பலவற்றின் கலவையாக ஒரு ரக்டான லுக்கில் இந்த முதல் பார்வை போஸ்டரில் பிரித்விராஜ் உள்ளார்.

முதல் பார்வை குறித்தும் படம் பற்றியும் பிரித்விராஜ் சுகுமாரன் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நண்பரும், இந்திய திரை உலகின் ஒரு இன்றியமையாத சக்தியாக இருக்கும் பிரபாஸ் அவர்கள், என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ’தி கோட் லைஃப்’ திரைப்படம் உருவாக்குவதில் நிறைய சவால்கள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். இருந்தாலும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என் எல்லைகளைத் உடைத்து இதில் நடித்துள்ளேன்.

என் வாழ்நாளில் ஐந்து வருடங்களை இந்தப் படத்தின் நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். உடல்ரீதியாக பல மாற்றங்களை சந்திக்க வேண்டி இருந்ததாலும் இந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் முழுமையாக்குவது மட்டுமே என் இலக்காக இருந்தது. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்களுக்கு இணையாக இந்த படம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப மிக பிரம்மாண்டமான காட்சி அமைப்பை இருக்க வேண்டும் என்பதற்காகவே சிரமப்பட்டு வெவ்வேறு சவாலான லொகேஷனை தேர்ந்தெடுத்து படமாக்கினோம். வெளிச்சத்துக்கு வராத சரித்திர நாயகர்களின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்பதில் உறுதி. படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியாகிய நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருக்கிறது.

9நாங்கள் இந்தப் படத்தை உருவாக்கி ரசித்த அளவுக்கு பார்வையாளர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Latest articles

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில்...

சமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்கப் போகிறேன்; அதற்கு முன்னோட்டமாக ‘அகம் பிரம்மாஸ்மி’ பாடலை உருவாக்கியுள்ளேன்! -சொல்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்களைப் பயன்படுத்தி 'அகம் பிரம்மாஸ்மி' என்ற ஆல்பம் பாடலை எழுதி, இசையமைத்து,...

More like this

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில்...
error: Content is protected !!