Tuesday, July 8, 2025
spot_img
HomeCinema‘ஆயிரம் பொற்காசுகள்' படம் பார்க்க ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவச திட்டத்திற்கு கமல்ஹாசன்...

‘ஆயிரம் பொற்காசுகள்’ படம் பார்க்க ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவச திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு!

Published on

தயாரிப்பாளரும் இயக்குநருமான கே ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதையடுத்து கே.ஆர்., கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதம் இது…

உயர்திரு கமல்ஹாசன் அவர்களுக்கு…

வணக்கம். வருகிற 22 ஆம் தேதி ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது. சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது படம் இருப்பதில்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன். அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன்.

இது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

எப்போதுமே திரையுலகில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்வதில் முன்னணியில் நிற்பது நீங்கள் தான். திரைத் தொழிலை காப்பாற்றத் துடிக்கும் தங்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக புரியும் என்று நம்புகிறேன். எனவே இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும். எனவே இந்த முயற்சிக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும். இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி.

நன்றி… நன்றி!

உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு செய்தி:

சிறப்பான முயற்சி… தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள்.

Latest articles

சினிமா என்பது கணிக்க முடியாத கேம்! -பறந்து போ படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் ராம் 

ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று...

‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும்! – ’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தமன்

  ’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக இணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில்...

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

More like this

சினிமா என்பது கணிக்க முடியாத கேம்! -பறந்து போ படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் ராம் 

ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று...

‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும்! – ’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தமன்

  ’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக இணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில்...

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...
error: Content is protected !!