HomeCinemaஇரட்டையர் சினிமா விமர்சனம்

இரட்டையர் சினிமா விமர்சனம்

Published on

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது தன் பிள்ளைகள் செய்யும் சிறிய தவறுகளை பெரிதாக நினைத்து அடித்து கதற விடுவார்களா?

இந்த கதையில் வரும் அம்மா, தன் ‘ட்வின்ஸ்’ மகள்களிடம் அப்படி முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறார். அம்மா அப்படி நடந்து கொள்வதை பார்த்து மகள்கள் மிரள்கிறார்கள். அது தங்கள் அம்மாவே இல்லை என சந்தேகப்படுகிறார்கள்.

அந்த அம்மா விபத்தில் சிக்கி, முகம் சிதைந்து, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மீண்டு வந்தவர். அதன் பிறகே அப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

அப்படியெனில் கண்டிப்பாக ஆள் மாறாட்டம் போல் ஏதோ நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளும் அப்படி யூகிக்கும்படிதான் இருக்கிறது.

நம் யூகத்தையெல்லாம் தாண்டி புதிதாய் ஏதாவது நடந்தால்தான் கதையின் போக்கு விறுவிறுப்பாக இருக்கும். அப்படியான விறுவிறுப்பை திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜெகதீஷ் தம்பையா.

அம்மாவாக நாடோடிகள் அபிநயா. இன்டர்வல் வரை முகத்தை மூடியபடி வருகிறார். மகள்களிடம் கடுகடுவென்று நடந்து கொள்ளும்போது ஆத்திரம் வருகிறது. அந்தளவுக்கு இயல்பாக நடித்துள்ளார். மகள்களிடம் அடிபட்டு ரத்தம் சிந்துகிற காட்சிகளும் படத்தில் உண்டு. அதில் முழுமையாக முகம்காட்டி பரிதாபத்தை அள்ளுகிறார்.

ட்வின்ஸாக வருகிற சிறுமிகள் அனுமிதா, அஷுமிதா இருவரும் அம்மாவைப் பார்த்து பயப்படுவது, அடிபட்டு அழுவதெல்லாம் ஓகே ரகமாக இருக்கிறது. தங்களுடனிருப்பது உண்மையான அம்மாவா போலியா என தெரிந்து கொள்வதற்கான முயற்சிகள், அம்மாவை தண்டிக்க களமிறங்கி வன்முறையை கையிலெடுக்கும் நடவடிக்கைகள் இயல்பு மீறியதாக இருந்தாலும் கதையோட்டத்திற்கு கச்சிதமாக பொருந்துகின்றன.

சுப்ரமணிய சிவாவை அலட்டலில்லாத வில்லனாகவும், அன்பான மனிதனாகவும் பார்க்க முடிகிறது. வெங்கட் சுபா டாக்டராக முக்கிய கதாபாத்திரம் ஏற்று சரியான மீட்டரில் நடித்திருக்கிறார்.

பரபரப்பை எகிறச் செய்யும் காட்சிகளுக்கு ஏற்றபடி பின்னணி இசையில் திறமை காட்டியிருக்கிறார் ஜி கே வி. முகமது அமீனின் ஒளிப்பதிவில் மலைப் பிரதேச அழகு கண்களில் நிறைகிறது.

எளியையான நடிகர் நடிகைகள் பங்களிப்பில் என்ன நடந்திருக்கும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிக் கடக்கும் காட்சிகளின் தொகுப்பாக 92 நிமிடங்களில் ஓடி முடியும் இந்த படம் வித்தியாசமான அனுபவம் பெற விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ்!

Rating 3 / 5

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this