Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

Published on

ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. நிகழ்வில் திரையுலகப் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

டார்லிங், இரும்புத் திரை, அண்ணாத்த, ஹீரோ, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கலக்கலான காமெடி படைப்பாக உருவாகும் இந்த படத்தில் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

‘இந்த படம் நர்ஸ் ஒருவரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில் உருவாக்கப்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துச் சிரிக்கும் படைப்பாக இருக்கும்’ என்கிறார்கள் படக்குழுவினர்.

பூஜை நிகழ்வையடுத்து படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெறுகிறது.

படக்குழு:- 
தயாரிப்பு: துவாரகா புரொடக்சன்ஸ் (Dwarka Productions) பிளேஸ் கண்ணன்
ஒளிப்பதிவு: தமிழ் ஏ அழகன்
இசை: டிஇமான்
படத்தொகுப்பு: சரத் குமார்
கலை: சுரேஷ் கல்லேரி
சண்டை: சுகன்
நடனம்: ஷெரிப்
ஒப்பனை: சுரேஷ்
ஆடை வடிவமைப்பு: ஷேர் அலி
உடைகள்: ரமேஷ்
புகைப்படம்: அன்பு
நிர்வாக தயாரிப்பு: நிதின் கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை: அழகர் குமரவேல்
விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ்
மக்கள் தொடர்பு: AIM சதீஷ்

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!