Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaவிஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' பட தலைப்பு அறிவிப்பு டீசர் ரசிகர்களுக்கு தந்த உற்சாக அனுபவம்!

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட தலைப்பு அறிவிப்பு டீசர் ரசிகர்களுக்கு தந்த உற்சாக அனுபவம்!

Published on

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. கௌதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் தலைப்பு தற்போது ‘கிங்டம்’ என அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.

தீவிர ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக இது உருவாகியுள்ளது. சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான த்ரில்லர் மற்றும் பிரம்மாண்ட திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் வழங்க இருக்கிறது.

டீசரில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும் சூர்யா தமிழுக்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

‘ஜெர்ஸி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் தின்னனுரி இந்த முறை விஜய் தேவரகொண்டாவை முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் காட்ட இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசர் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை திருப்திபடுத்தும் வகையில் அமைந்து, உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிக்கின்றனர்.

படம் மே 30, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப க் குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: கௌதம் தின்னனுரி,
தயாரிப்பாளர்கள்: நாக வம்சி எஸ் – சாய் சௌஜன்யா,
இசை: அனிருத் ரவிச்சந்தர்,
ஒளிப்பதிவு: ஜோமோன் டி ஜான் ஐஎஸ்சி, கிரிஷ் கங்காதரன் ஐஎஸ்சி,
எடிட்டர்: நவீன் நூலி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா,
ஆடை வடிவமைப்பாளர்: நீரஜா கோனா,
நடன இயக்குநர்: விஜய் பின்னி,
ஆக்‌ஷன்: யானிக் பென், சேத்தன் டிசோசா, ரியல் சதீஷ்,
தயாரிப்பு:
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!