Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaசினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும்!...

சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும்! -அலங்கு பட பிரஸ் மீட்டில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு

Published on

டாக்டர் அன்புமணி ராமதாஸின் மகள் தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த டிசம்பர் 13-ம் தேதி சென்னையில் நடந்தது.  படக்குழுவினரோடு இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் எஸ்.பி சக்திவேல், ”இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தயாரிப்பாளர் அருண் விஷ்வா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கதையின் நாயகனாக திரு குணாநிதி மற்றும் அனைத்து நடிகர்களும் தங்களின் முழு உழைப்பையும் போட்டு நடித்துள்ளார்கள் . இத்திரைப்படத்தில் ‘காளி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் மிகவும் சிறப்பாக ஒத்துழைத்துள்ளது. படம் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது. படத்தை மக்களிடையே கொண்டு சென்று மிகப்பெரிய வெற்றியடைய செய்யுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி, ”’அலங்கு’ என்றால் ராஜ ராஜ சோழன் காலத்தில் போர்க்களத்தில் உபயோகிக்கக் கூடிய நாய்களாகும். அப்பெயரை படத்தின் தலைப்பாக தேர்வு செய்த இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு நன்றி. ‘அலங்கு’ என்ற பெயர் அநைவரையும் ஈர்க்கக் கூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது. எங்கள் குழுவிற்குள் ஏதேனும் கசப்பான சூழ்நிலை வந்தாலும் அந்த நொடியே அதை தூக்கி எறிந்துவிட்டு படத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டோம். இப்படிப்பட்ட குழுவோடு இணைந்து பணியாற்றியது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். படத்தை திரையரங்கில் வந்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், “இயக்குநர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார். நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன்.

பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நிச்சயம் அதில் பெரிய கருணை இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படம் உருவாக்கப்பட்டு அதில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து இங்கு வந்து இன்று நம்முன் இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஆடி தங்கள் திறமைகளை காட்டிய இந்த மனிதர்களுக்கு சின்னதா கை தட்டி வாழ்த்தினாலே போதும். அதுவே அவர்களுக்கான அங்கீகாரம்.

இந்த படத்தில் நியாயமும், தர்மமும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அதை வெற்றி பெற வைப்பார்கள். சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போல தான் சினிமாவும். 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்களை உருவாக்கும் போது அப்படத்தின் இயக்குனர் இறப்பின் விளிம்பிற்கு செல்கிறான். படம் நல்லா இல்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏனென்றால் 150 ரூபாய் கொடுத்துதான் பார்க்கிறோம். ஆனால் சினிமாவை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக்கு காட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் காளிவெங்கட், ”படத்தில் கதாநாயகனின் தாய்மாமனாக நடித்துள்ளேன். கதையின் நாயகன் குணாநிதி அவருடைய நடிப்பு முதல் படம் போல் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக உள்ளது . இயக்குனர் சக்திவேல் மற்றும் இந்த படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தன் சொந்த வாழ்க்கையில் நாய்களுடனான தொடர்பை பகிர்ந்து கண்ணீர் மல்க உரையாடினார். இத்திரைப்படத்திற்காக கேரளாவில் படப்பிடிப்பிற்காக சென்றோம் அங்கே நடந்த நினைவுகள் எல்லாம் மறக்க முடியாதவை. இந்த திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்றார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர் குணாநிதி, தயாரிப்பாளர் சபரீஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!