Friday, April 25, 2025
spot_img

Published on

இந்தியாவின் மிகபிரமாண்ட திரைப்படம் ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!

ரசிகர்களே வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், ‘ராமாயணம்’, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியர்த்தில் ஆழ்த்தவுள்ளது.! இந்த காவிய திரைப்படம், இந்தியாவின் மிகவும் நேசத்துக்குரிய கதையினை மிகப்பிரம்மாண்டமாக தொலைநோக்கு கதைசொல்லலுடன் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.

பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் தொலைநோக்கு சக்தியாக, நமித் மல்ஹோத்ரா ஹாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார், இதில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி போன்ற சமீபத்திய வெற்றித் திரைப்படங்களும் அடங்கும். கூடுதலாக, அவர் ஆங்க்ரி ஃபேர்ட்ஸ் 3ஐயும் சமீபத்தில் அறிவித்துள்ளார். நமித் மல்ஹோத்ராவின் கதைசொல்லல் பற்றிய ஆழமான புரிதல் அவரை ஹாலிவுட்டின் மிக முக்கியமான இந்தியர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது!

https://www.instagram.com/p/DCBD-oBzE5o/?igsh=NnNlOXZkNmR1MDhl

சமூக ஊடகங்களில், நமித் மல்ஹோத்ரா ஒரு போஸ்டரை பகிர்ந்து கொண்டு கூறியுள்ளதாவது.., “ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான இதயங்களை ஆட்சி செய்த, இந்த காவியத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கான உன்னதமான தேடலை நான் தொடங்கினேன். இன்று, எங்களது குழு ஒரே ஒரு அரிய நோக்கத்துடன் அயராது உழைக்கும்போது, அது அழகாக வடிவம் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்: நமது வரலாறு, நமது உண்மை மற்றும் நமது கலாச்சாரத்தின் மிகவும் உண்மையான, புனிதமான மற்றும் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் தழுவல் – நமது “ராமாயணம்” – உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விரைவில்.

நமது மிகப் பெரிய காவியத்தை பெருமையுடனும், பயபக்தியுடனும் உயிர்ப்பிக்கும் எங்கள் கனவை நிறைவேற்ற எங்களுடன் சேருங்கள்.

Latest articles

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

More like this

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை...
error: Content is protected !!