Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaமலையாள மாடலிங் உலகிலும் பவி கேர் டேக்கர் படத்திலும் அசத்திய ரோஸ்மினை 'பிரேக் ஃபாஸ்ட்' படம்...

மலையாள மாடலிங் உலகிலும் பவி கேர் டேக்கர் படத்திலும் அசத்திய ரோஸ்மினை ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா!

Published on

தமிழ்த் திரையுலகம் திறமையான கலைஞர்களுக்கு தவறாமல் வாய்ப்புகள் தந்து கொடுத்து ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் திலீப்பின் ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பிற்காக மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ரோஸ்மின் விரைவில் இணையவுள்ளார். காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள ரோஸ்மின் மாடலிங் துறையில் தடம் பதித்தார். மலபார் 2022′ பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மிஸ் குயின் கேரளா 2023-ல் முதல் இடம் மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2023-ல் இரண்டாவது இடமும் பிடித்தார்.

அவரிடம் பேசியபோது “சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கி வைக்கும்படியான இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாது நிறைய புது விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்.

நான் சினிமாவை நேசிப்பவள். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உள்ளது. அது எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்றார்.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!